எனக்கு பிடித்த சினிமா சில

எனக்கு பிடித்த சினிமா சில

About My Blog

ஒரு சராசரி மனிதனின் ஆயுள் 80 வயது என்றால் அதில் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களை சினிமாவுக்காகவே செலவிடுவதாக ஆய்வு கூறுகிறது..அந்த அளவுக்கு சினிமாவின் வளர்ச்சி என்பது கடந்த 100 ஆண்டுகளில் நம் கற்கனைக்கு அப்பால் சென்றிட, சாமன்யன் தொடங்கி உயர்த்தர மக்கள் வரை அது ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மாற்றங்களை எழுத்துக்களால் முழுமையாக விவரிப்பது கடினம்.
வேலை விட்டால் வீடு..வீடு விட்டால் வேலை என்ற நெருக்கடியான சூழ்நிலையில், பொழுதுபோக்கு அமசங்களைத் தாண்டி கடந்தக்காலத்தின் நினைவுகளையும் நிகழ்க்கால உண்மைகளையும் எதிர்க்காலத்தில் அறிந்துக்கொள்ள மிக எளிமையான ஒரு கருவியாக சினிமா உருவெடுத்துக் கொண்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.இனம், மொழி, மதம், நாடு கடந்த நிலையில் உலக மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றுக்கூடும் களமாக சினிமா இன்று..பொது மொழி பேசுகிறது..அந்த மொழி பேச கற்றுக் கொண்டிருப்பவர்களின் வரிசையில் நான்..

எழுதுவது என்பது பொதுவாகவே கொஞ்சம் சோம்பலான விஷயம்.அதுவும் என்ன எழுதுவது என்று தெரியாத நிலையில் தலையில் கை வைத்தப்படி உட்கார்ந்து இருப்பது கொடுமையான ஒன்று.ஆனாலும் ஏதாவது எழுதலாம் என்று சில கதைகள் கிறுக்கிய அனுபவமெல்லாம் இருக்கிறது..அதுவும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆவல் கொஞ்சம் தமிழ் இணையத்தளங்கள் வரை கொண்டு வரவே அன்று தெரிந்துக்கொண்ட வார்த்தைதான் இந்த "உலக சினிமா"..அன்றுவரை மலேசிய தமிழனாக இருந்தாலும் இந்திய அதுவும் தமிழ் படங்களைத் தவிர வெறெந்த மொழி படங்களும் பெரிய அளவில் பார்க்காத பட்சத்தில் தமிழ் பதிவர்கள் மத்தியில் அறிந்துக்கொண்ட ஒரு வார்த்தை அது.அதை பற்றி மேற்க்கொண்டு தேடியபோதுதான் தெரிந்தது ஓர் உண்மை.அதுவரை பார்த்து ரசித்த சூப்பர்மேட், எக்ஸ் மேன், ஸ்பைடர்மேன் போன்ற படங்களைத் தாண்டி வேற்று மொழி பேசும் அயல்நாட்டு திரைப்படங்களின் உலகம் என்பது பரந்து விரிந்தது என்று..படித்துக்கொண்டிருக்கும் போதே சினிமாவை பற்றி தேடலானேன்..சில நல்ல திரைப்படங்களின் அறிமுகம் மேற்க்கொண்டு சினிமா மீதான எனது பார்வையை திருப்பியது.அதன் தொடர்பான சில எண்ணங்களை யாருனாவது பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல்..தமிழ் ப்ளோகிங் உலகத்துக்கு கொண்டு வந்தது..எனது முதல் ப்ளாக்கின் பெயர் Kumarans கனவுகள் ஆயிரம்..அது தொடங்கும்போது என்னுடைய வயது 19-தான்..இவ்வளவு தரமான விமர்சகர் மற்று ரசிகர்களின் மத்தியில் நாமெல்லாம் எந்த மூலை என்ற ஓர் அச்சம் தொடர்நது எழுத முட்டினாலும் சில நண்பர்களின் ஆதரவு மேற்க்கொண்டும் எழுத தூண்டியது..

சத்தியமாக நானெல்லாம் எழுதுவது விமர்சனமே கிடையாது..நான் விரும்பும் திரைப்படங்களை குறித்த திரை அனுபவங்களே தவிர எனது பதிவுகளை விமர்சனமாக இன்றுவரை எண்ணியது இல்லை..இதுவரை எழுதிய..இனியும் எழுதப்போகின்ற அத்தனையும் எனது தனிப்பட்ட சினிமா மீதான பார்வைகளே.இனி எனது சினிமா உலகம்..    
இன்றுவரை எனக்கு பிடித்த படங்களை பட்டியல் எடுத்ததில்லை..அவ்வப்போது பார்த்து சில பார்வைகளை தொகுப்பதோடு சரி..ஆனால் மறக்க முடியாத..சினிமா என்று சொன்னவுடன் சட்டென்று நினைவுக்கு வரும் திரைப்படங்கள் வரிசையில் சில..


உங்களுக்கு பிடித்த படங்களையும் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்..அடுத்த பதிவில் "பார்வையோடு"..  

No comments :

Post a Comment